18 அக்டோபர், 2021

இழை

எழுத்துக்களை எழுதும் பொழுது சில சமயங்களில் எண்ண ஓட்டங்கள் பிரமாதமாக ஓடுகிறது. எடுத்துக்காட்டாக, கடந்த போஸ்டிங் ‘மழை’ எழுதும் பொழுது சும்மா மழை பெய்வது மாதிரி ஒரு நூறு போஸ்டிங்களுக்கு வேண்டிய எண்ணங்கள் மனதிலே வந்தது. 

டூ வீலர் கும்பல், தேன் கூடு மாதிரி இருந்தது என்ற எண்ணத்தை ஒரு கவிதையாக வடிக்கலாம் என்று தோன்றியது.

எண்ண இழைகளும், எழுதும் செயலும் அப்படியே ஒரு அனுபவமாகச் சென்றது. எழுத்திலே வடிக்கவில்லை. எண்ணங்கள் மறந்து போயின.

அடுத்த மூன்று நாட்கள் போஸ்டிங்கே நடக்கவில்லை. எண்ண இழைகளும் மாறியது.

மகன் மேல் இருந்த கரிசனம், அவன் தூங்கு மூஞ்சியாகவும், அவன் ‘சள்சள்’ பேச்சுக்களாலும், பிசிகல் அலட்டலில்லாமல் ஒரு விடியோ கேமையே ஆடிக்கொண்டிருப்பதாலும் கோபமாக மாறியது.

பிஸிகல் ஆக்டிவிட்டி இல்லையென்றால் எப்படி தொப்பை குறையும்?

கணபதியே வந்தனம். கணபதியிடம் வேண்டும் இழையும், நடையும் கூட சல்லீஸாக விட்டுப் போகிறது.

கணபதியே நன்றி. என் வேண்டுதல்களுக்கு நல்ல போல் செவி கொடுத்து அருள் பாவித்துக் கொண்டிருக்கிறாய்.


16 அக்டோபர், 2021

மழை

மழை சொறீனென்று பெய்து கொண்டிருக்கிறது.

மகன் டூ வீலரில் எப்படி வருவான் என்று மனம் கவலை கொள்கிறது.


கவலை கொண்டிருந்தால் கவலை பட்டுக் கொண்டிருக்கலாம். இந்த மாதிரி சந்தர்பங்களில் என்ன செய்யலாம்?


1.எங்கேயாவது நின்று விட்டு வரவேண்டும்.

2.மழையில் நனைந்து கொண்டு வரவேண்டும்.





நானாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன். அவனும் அதைத்தான் செய்வான். இதிலென்ன கவலை?

நேற்று அங்கே, நைஸ் ரோடிலே வரும்பொழுது, ரோட்டின் மேலே போகும் இன்னொரு மேல் ரோட் மேம்பாலத்தை கூரையாக கொண்டு, ஒரு தேனீ கூண்டைப் போல அடிவாரத்தில்குமைந்து கிடந்த டூ வீலர் கும்பலை பார்த்தாயே.

டூ வீலரில் ஆங்காங்கே ஓடாடும் பல மக்களைப் போலல்லவா என் மகனும். 

எப்படியோ வந்து விடுவான்.

கவலைப் படு. கவலை மேலிருந்து எழு. என்ன ஓக்கேயா?

படவாப் பய மடிவாளா வரை மழையில் மானேஜ் செய்து, பிறகு என் நண்பன் வீட்டில் தங்கி வருகிறேன் என்று சொல்லி காலையில் வந்தான்.


11 அக்டோபர், 2021

ரஜத்

 

Gunas

(image credit https://www.unbrokenself.com/the-three-gunas-a-revolutionary-model-for-mastering-your-mind-and-life/)


ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் அதாவது ரஜத் குணத்தால் இங்கு எழுத வந்திருக்கிரேனா?

நல்ல சத்வ குணம் தற்பொழுது மனதில் குடி கொண்டிருப்பதால் எழுத வந்திருக்கிரேனா?

அல்லது தமோ குணம் மனதிலும் உடலிலும் இல்லாதிருப்பது இங்கு எழுத வரக் காரணமோ? 

மனம் இப்படி ஆராய்சி செய்வது இந்த மூன்று குணங்களைப் பற்றி என்றால் என்ன விஷயம்?

மூன்று குணங்களின் கலவை மனதில் பரவியிருப்பதை அனுபவித்தல் என்பது தான் விஷயம்.

அனுபவித்தல் என்பது ….. ம் ம் ம்... ரஜத் குணமா அல்லது சாத்வீக குணமா? 

எழுதுவதை ஒரு செயலாக செய்வது தாமோவா? என்ன எழுதுகிறேன் என்று ஒரு ஈடுபாடு கொண்டு செய்வது ரஜோ குணம் என்று வைத்துக் கொள்ளலாமா? எழுதுவது ஒரு நல்ல செய்தி என்றால் அது சத் குணமென்று வைத்துக் கொள்ளலாம்.

நாம் செய்து கொண்டிருப்பதை/ செய்யாமலிருப்பதை  மனம் இந்த மூன்று குணங்களின் விழிப்புணர்வுடன் அசை போட்டால் ஒரு தனி அனுபவம்.



கடவுளின் அருள்